உலகம்

வனவிலங்குகளை வேட்டையாடினால் ஆயுள் தண்டனை!

வனவிலங்குகளை வேட்டையாடினால் ஆயுள் தண்டனை!

webteam

வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என கென்யா அரசு தெரிவித்துள்ளது. 

கென்யா நாட்டில் பராமரிக்கப்பட்டு வந்த சூடான் என்ற வெள்ளை இன கடைசி ஆண் காண்டாமிருகம் ஒன்று கடந்த மாதம் உயிரிழந்தது. இதன் நினைவாக கென்யாவில் நினைவுக் கல் நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்யாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் நஜிப் பாலாலா, தந்தத்துக்காக காண்டாமிருகம், யானைகள் கொல்லப்படுவதை‌ தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

அத்துடன் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க கென்ய அரசு முடிவெடுத்துள்ளாதவும் அவர் குறிப்பிட்டார். அழிவின் விளிம்பில் இருக்கும் காண்டாமிருகங்களில் 650 கருப்பு காண்டாமிருகங்கள் மட்டுமே கென்யாவில் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.