சோமஸ்கந்தர் உலோகச் சிலை புதிய தலைமுறை
உலகம்

காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ்கந்தர் உலோகச் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

PT WEB

இந்தச் சிலையின் சர்வதேச சந்தை மதிப்பு தோராயமாக எட்டு கோடி ரூபாய் இருக்குமெனவும், இந்தச் சிலையின் அமைப்பு மற்றும் எழுத்துக்களை பார்க்கும்போது 18ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட சோமஸ் கந்தர் உலோகச் சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் இருந்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் திருடப்பட்டு, பின்பு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் விற்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இதையும் படிக்க: உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!