காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலை திருட்டுத்தடுப்புப் பிரிவினர் சமீபத்தில் கூறியுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சிலை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதா என காஞ்சி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான தொன்மை வாய்ந்த எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ்கந்தர் உலோக சிலை ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் தற்போது கண்டுபிடித்துள்ளதாக செய்தி
வெளியானது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே சிலைக்கடத்தல்
தடுப்புப்பிரிவினர், இந்த சிலையை கண்டுபிடித்ததாக கூறிய நிலையில் இப்போது மீண்டும் கண்டுபிடித்ததாக கூறுவதா என்று கேள்வி எழுப்பும் மக்கள், சிலை கடத்திய குற்றவாளிகள்
மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கிறார்கள்.
சோமாஸ்கந்தர் சிலை 1991 ஆம் ஆண்டே கடத்தப்பட்டுவிட்டது என்றும், இதன்பிறகு பித்தளை சிலை வைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், குற்றம்சாட்டியுள்ளார்.
சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்பா செரின், இவரது மகள் மம்தா கபூர் இருவரும், வெளிநாட்டில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை வைத்துள்ளதாகவும், இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் பொன்மாணிக்கவேல் வலியுறுத்தினார்.