ஜோ பைடன், கமலா ஹாரிஸ் pt web
உலகம்

“அதிபர் ஜோ பைடனிற்கு நன்றி..” அதிபர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு கமலா ஹாரிஸ் பெருமிதம்

PT WEB

அமெரிக்க அதிபர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதற்கு முன்மொழிந்த அதிபர் ஜோ பைடனுக்கு, துணை அதிபர் கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிபராக இருந்து நாட்டிற்கு சேவை புரிந்து வரும் ஜோ பைடனுக்கு, நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன். இந்தப் போட்டியில் வெற்றிபெற்று அதிபராக வேண்டும் என்பதே எனது எண்ணம்.

கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்

தேர்தலுக்கு 107 நாட்களே உள்ள நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து போராடி, வெற்றிபெற்று காட்ட வேண்டும். நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து, டொனால்டு டிரம்பை வீழ்த்திக்காட்டுவேன்” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவதற்கு முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும், அவரது மனைவியுமான ஹிலாரி கிளிண்டனும் ஆதரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கமலா ஹாரிசை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே அமெரிக்காவின் எதிர்காலம் அமையும்” என்றும் தெரிவித்துள்ளனர்.