உலகம்

இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: கமலா ஹாரிஸ்

இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: கமலா ஹாரிஸ்

Sinekadhara

கொரோனா தொற்றின் தொடக்க காலத்தில், அமெரிக்க மருத்துவமனைகள் திணறியபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டிய நிலையில், இப்போது உதவி தேவைப்படும் இந்தியாவுக்கு கைகொடுக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் சார்பில் புலம்பெயர்ந்தோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதை அவர் தெரிவித்தார்.

எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறிய அவர், இந்தியாவுக்கு ஏற்கெனவே ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 முகக்கவசங்கள் அனுப்பபட்டுள்ளதாக கூறினார். அவை மேலும் அனுப்பப்பட இருப்பதாக கூறிய கமலா ஹாரிஸ், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்தும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.