அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்கா | ஜனநாயகக் கட்சியின் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ், அதிபர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.

PT WEB

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அண்மையில், அவர் போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில் துணை அதிபரான கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

இதற்காக ஜனநாயகக் கட்சியின் தேசிய பிரதிநிதிகள் இடையே ஆன்லைனில் 5 நாட்கள் தேர்தல் நடந்தது. அதில் நடந்த சுற்றுகளில் அவர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். இதில், 4,567 பிரதிநிதிகள் கமலா ஹாரிசுக்கு வாக்களித்தனர். 99 சதவிகித வாக்குகள் அவருக்கு ஆதரவாக பதிவாகியதையடுத்து, அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் அமெரிக்காவின் மிக உயரிய பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய அமெரிக்கர், தெற்காசியத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற பெருமையை பெறுகிறார் கமலா. இதையடுத்து, துணை அதிபர் வேட்பாளராக Minnesota ஆளுநர் Tim Walz ஐ கமலா ஹாரிஸ் அறிவித்தார். இவர் பள்ளிகளில் இலவச உணவு முறையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.