kai bird pt web
உலகம்

“இந்தியாவில் குடியேற Oppenheimer-ஐ அழைத்தார் நேரு” - எழுத்தாளர் Kai Bird பகிர்ந்த சுவாரஸ்யம்!

இந்தியாவில் குடியேற ஓபன்ஹெய்மரை அப்போதைய பிரதமர் நேரு அழைத்ததாக எழுத்தாளர் Kai Bird தெரிவித்துள்ளார்.

Angeshwar G

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓபன்ஹெய்மர். Kai Bird மற்றும் Martin J. Sherwin ஆகியோரால் எழுதப்பட்டு 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம் American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer. இந்த நூலின் தாக்கத்தில் தான் Oppenheimer திரைப்படத்தை எடுத்ததாக நோலன் தெரிவித்திருந்தார்.

OPPENHEIMER movie poster

இந்நிலையில், சொந்த நாட்டினரால் ஓபன்ஹெய்மர் புறக்கணிக்கப்பட்ட பின் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு 1954 ஆம் ஆண்டு அவருக்கு குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறார் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான நேர்காணலில் எழுத்தாளர் Kai Bird தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “1954 ஆம் ஆண்டு அவர் அவமானப்படுத்தப்பட்ட பின் நேரு அவரை இந்தியா வரவழைத்து அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முன்வந்தார். ஆனால் அதை ஓப்பன்ஹெய்மர் பெரிதாக கருதவில்லை. ஏனென்றால் அவர் ஆழ்ந்த தேசபக்தியுள்ள அமெரிக்கர்” என தெரிவித்துள்ளார்.

1954 அக்டோபரில் ஓபன்ஹெய்மர் இது குறித்து பேசுகையில், “அணுகுண்டு என்பது, ஆக்கிரமிப்பாளர்களுக்கான ஆயுதங்கள்; இப்படியான அணுகுண்டு ஆயுதங்கள் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

ஓபன்ஹெய்மர் குறித்து தான் எழுதிய புத்தகத்தில் Bird கூறுகையில், “ஓபன்ஹெய்மர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் நடைமுறையில் அவர் யூதராக வாழவில்லை. இருப்பினும் ஜெர்மனியில் இருந்து வந்த யூத அகதிகளை மீட்பதற்காக அவர் பொருளாதார உதவிகளை செய்தார்” என தெரிவித்துள்ளார்.

ஹிரோஷிமா நாகசாகி தாக்குதலுக்கு பின் ஓபன்ஹெய்மர் கலவையான உணர்ச்சிகளையே கொண்டிருந்தார் என்றும் தாக்குதலின் காரணமாக அவர் மிகவும் கவலை அடைந்திருந்தார் என்றும் Bird தெரிவித்துள்ளார்.