உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் கட்டுதல் பிரச்னை; தடை விதித்த அமெரிக்கா!

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் கட்டுதல் பிரச்னை; தடை விதித்த அமெரிக்கா!

JustinDurai

ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவதால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட 36 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேருக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளதாகவும், 6 பேருமே 18 முதல் 48 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்றும் அமெரிக்க மருந்து கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசிக்கு தற்காலிகத் தடை விதிப்பதாக அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இதேபோல தென் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மருந்திலும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வைரஸை உடலில் செலுத்தும் தொழில்நுட்பம் கொண்ட தடுப்பூசிகளில் ரத்தம் கட்டுதல் புகார்கள் எழுகின்றன.