அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன. அதாவது, ஜோ பைடன் தடுமாற்றம் அடைவது குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ’புதின்’ என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ’ட்ரம்ப்’ என்றும் தவறுதலாக கூறினார். இதுபோக, ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது என தொடர்ந்து கொண்டே சென்றது.
மேலும், ஜூன் 27-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பைடன் செயல்பட்ட விதம் கட்சிக்குள்ளேயே இவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப காரணமாக இருந்தது.
இதனையடுத்து, அதிபர் போட்டியிலிருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
மேலும், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்நிலையில், ஜோ பைடனின் மருத்துவர் கெவின் ஓ கார் ,ஜோ பைடனின் மனம் உடல் நிலை குறித்தும், பார்க்கின்சன் நோய் குறித்தும் நியூயார்க் போஸ்டிடம் விளக்கமளித்துள்ளார்.
ஜோ படைன் பதவிலிருந்த 3 ஆண்டுகளுக்கும் மேலான காலக்கட்டங்களில் இவர் ஒருபோது பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்கின்சன் நோய் நிபுணர் ஒருவர் கடந்த ஆண்டு முதல், எட்டு முறை வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார் என்று பத்திரிக்கை ஒன்றில், தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜோ பைடன்க்கு இந்த நோய் உள்ளதா , சிகிச்சை பெற்றாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்த மருத்துவர்...
”ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் இவரது உடல்நிலை மாறுமா?...” என்று பத்திரிக்கையாளர் மருத்துவரிடம் கேட்டார்.
அதற்கு மருத்துவர், “ இல்லை என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
பத்திரிக்கையாளர்,“ அவருடைய மன ஆற்றல் எப்படி இருக்கிறது?” என்றார்.
“ மிகவும் நன்றாக இருக்கிறார்.” என்றார் மருத்துவர்.
“ஜோ பைடனுக்கு பார்கின்சன் நோய் தொடர்பாக ஏதாவது ஊகிக்க முடிகிறதா?..
“ அப்படி எதுவும் இல்லை., அவர் நன்றாகவே இருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில், அதிபர் ஜோ பைடன் பார்கின்சன் நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று தவறாக வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.