உலகம்

கொரோனா பாதிப்பால் வேலையின்றி 2.6 கோடி பேர் தவிப்பு: திகைத்து நிற்கும் அமெரிக்கா!!

கொரோனா பாதிப்பால் வேலையின்றி 2.6 கோடி பேர் தவிப்பு: திகைத்து நிற்கும் அமெரிக்கா!!

webteam

அமெரிக்காவில் மேலும் 44 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லை என பதிவு செய்துள்ளதால் அங்கு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.

 கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்துள்ளனர். வேலையை இழந்து அதற்கான உதவித்தொகை கேட்டு அரசிடம் பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் கூடுதலாக 44 லட்சம் பேர் தங்களுக்கு வேலையில்லை என பதிவு செய்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

மார்ச் மாதத்தில் இருந்து ஆறில் ஒரு அமெரிக்கர் தனது வேலையை இழந்திருப்பதாக மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 1929ஆம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு மோசமான நிலையை அமெரிக்க சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.