ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோவுக்கு வாழைப்பழத்தை உரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வேலைகளுக்கு மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் ரோபோக்களை உருவாக்கி அவற்றுக்கு மனிதர்களை போல் வேலை செய்வதற்கான பயிற்சியும் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தாங்கள் உருவாக்கிய ரோபோவை வாழைப்பழம் உரிக்க வைப்பதில் பெருமளவு வெற்றிபெற்றுள்ளனர்.
வாழைப்பழத்தை நசுங்காமல் உரிப்பதற்காக 13 மணி நேரம் பயிற்சி தர வேண்டியிருந்ததாக அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும் ரோபோக்கள் வாழைப்பழத்தை சரியான முறையில் உரிக்கும் விகிதம் 57% ஆக மட்டுமே இருப்பதாகவும் இதை 100% ஆக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பரிசோதனை ரீதியிலான இந்த முயற்சியில் முழு வெற்றி கிடைத்தால் மனிதர்களை போலவே ரோபோக்களையும் எல்லா வேலைகளையும் செய்ய வைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்