உலகம்

வரவேற்கும் குளிர்காலம்: வண்ண விளக்குகளால் மிளிரும் டோக்கியோ

வரவேற்கும் குளிர்காலம்: வண்ண விளக்குகளால் மிளிரும் டோக்கியோ

webteam

குளிர்கால சுற்றுலாவை வரவேற்கும் விதமாக ஜப்பான் நாட்டின் முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

ஜப்பானில் குளிர்கால சுற்றுலா சிறப்பு வாய்ந்தவை. இதை ரசிக்கவும் அனுபவிக்கவும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். குளிர்கால சுற்றுலாவை வரவேற்கும் விதமாக, தலைநகர் டோக்கியோவில் உள்ள மெகுரோ மற்றும் சகாமி நதிக்கரையில் உள்ள செர்ரி மரங்கள், கட்டடங்கள், கேளிக்கை விடுதிகளில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் இளஞ்சிவப்பு நிற எல்இடி விளக்குகள் ஒளிரூட்டப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு வருகை தரும் இளம் தம்பதிகளை‌ கவரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

‘இவை, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் கண்களை உறுத்தாத வகையில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வசந்த காலத்தில் செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும் காட்சியை காணவே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அதைவிட இந்த வண்ண விலங்கு அலங்காரம் ரசிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது’ என்று இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.