கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு சானிடைஸர் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆல்கஹாலை நேரடியாக பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி இருக்கின்றனர். ஜப்பானில் 7600 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி கை கழுவுவதும், கைகளை ஆல்கஹால் கலந்த சானிடைஸரும் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சானிடைஸருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மது தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் சானிடைஸரை தயாரித்து வருகின்றனர். மிக முக்கியமாக இந்த சானிடைஸர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அதிகமாக பயன்படுகிறது. அதனால் ஜப்பான் நாட்டில் சானிடைஸர்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சானிடைசரிலும் 70 முதல் 80 சதவித ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. சில சானிடைஸர்களில் 40 சதவித ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாகவே ஆல்கஹாலை சானிடைஸர்களுக்கு பதிலாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுவில் ஒருவகையான வோட்காவை நேரடியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது சானிடைஸரைவிட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு வீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் வோட்காவை நேரடியாக பயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளை சுத்தம் செய்து பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.