உலகம்

ஜப்பானில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது – வெளிநாட்டு பயணிகளுக்கு தடை

ஜப்பானில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது – வெளிநாட்டு பயணிகளுக்கு தடை

Veeramani

ஜப்பான் நாட்டில் இன்று நமீபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் மரபணு மாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் வீரியமிக்கதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், பிரிட்டன், கனடா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று(28.11.2021) ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கு வந்த 30 வயதுடைய நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டார். பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்று ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியுரிமை காரணங்களால் அவரது நாடு மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருடன் பயணம் செய்தவர்கள் மற்றும் அவரின் அருகிலுள்ள இருக்கைகளில் பயணித்தவர்களின் அடையாளம் காணப்பட்டு சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒமிக்ரான் மாறுபாட்டினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்தது.