தனியார் ராக்கெட் PT
உலகம்

ஜப்பான்: தனியார் நிறுவனத்தால் விண்ணில் அனுப்பப்பட்ட ராக்கெட்-சில விநாடிகளிலேயே வெடித்து சிதறிய சோகம்

ஜப்பானில் தனியார் நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்பட்ட 18 மீட்டர் ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட்ட சில விநாடிகளில் வெடித்து சிதறியது.

PT WEB

ஜப்பானில் தனியார் நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்பட்ட 18 மீட்டர் ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியது.

செய்தியாளர் பாலவெற்றிவேல்

உலகம் விண்வெளிதுறையில் கவனம் செலுத்திவரும் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பல தனியார் நிறுவனங்களும் இதில் சாதித்து வருகிறது. அந்தவரிசையில் ஜப்பானில் தனியார் நிறுவனத்தால் தயாரித்து முதல்முயற்சியாக விண்ணில்அனுப்பப்பட்ட ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியது.

டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவமான ஸ்பேஸ் ஒன் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது. ஜப்பானில் முதல் முதலில் ராக்கெட் அனுப்பிய தனியார் நிறுவனமான ஸ்பேஸ் ஒன் ஜப்பானில் உள்ள வகையாமா மாகாணத்தில் சொந்த ஊர் தளத்தில் இருந்து அரசின் சிறிய ரக செயற்கைக்கோளை அனுப்பியது. 18 மீட்டர் உயரம் கொண்ட திட எரிபொருளால் இயங்கும் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த சில வினாடிகளில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறிய உடன் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

உடனடியாக அங்கிருந்த வீரர்கள் ஏவுதலப் பகுதிகளில் தீ பற்றிய இடங்களை தண்ணீரால் பீச்சி அடித்து அணைத்தனர். கடந்த வருடம் ஹச் 3 ரக ராக்கெட் சோதனையை இந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட நிலையில், சர்வதேச அளவில் விண்வெளி துறையில் முன்னேறி வரும் நிறுவனமாக இருக்கிறது.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் திரும்பி வரும் ராக்கெட் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் இந்த நிறுவனத்தின் முதல் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.