பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகளின் தாயான ஆசிரியை ஒருவர் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
கராச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்டோருடன் சென்ற வேன் மீது, உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் சீன பேராசிரியர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதுகலை பட்டதாரியான ஆசிரியையின் கணவர் மருத்துவராக பணியாற்றுகிறார். 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய ஆசிரியையின் செயலால் பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் 4ஜி அலைபேசி சேவை