காஸா x
உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவின் திடீர் தாக்குதல் ஏன்? - பின்னணியில் 50 ஆண்டு கால வரலாறு!

ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் படைப்பிரிவினரும் காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய திடீர் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 232
பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காஸா முனைப் பகுதியில் இருந்து செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது.

50 ஆண்டு காலமாக தொடரும் பிரச்னை!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிரச்னையானது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீது 5000-7000 குண்டுகள் வரை வீசி ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெருசலேமில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேலில் உள்ள படைவீரர்கள் குறிப்பாக ராணுவ வீரர்கள் காஸா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏனென்றால் அங்குதான் ஹாமாஸ் தீவிரவாதிகள் இருக்கின்றனர்.

நேற்று நடந்த இத்தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 70 பேரும், பாலஸ்தீனத்திலிருந்து 198 பேரும் மரணமடைந்துள்ளார்கள் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் நீண்ட நாளாக இந்த எல்லை பிரச்னையானது தொடர்ந்து வருகின்றது. குறிப்பாக 2007 ஆம் ஆண்டிலிருந்து ஹாமாஸ் இயக்கத்தினரின் கட்டுபாட்டில் இந்த காஸா பகுதியானது இருந்து வருகின்றது.

இக்காஸா பகுதியை பொறுத்தவரை ஜெருசலேமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்குதியானது தீவு நகரை போல ஹாமாஸ் இயக்கத்தினரின் கட்டுபாட்டில் இருக்கிறது. அங்கிருந்துதான் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அக்டோபர் 7ஆம் தேதி 1973-ல் யூதர்களின் காலண்டரை பொருத்தவரை இத்தேதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அவர்களின் புனித நாளாக கருதப்படுகின்றது.

பதிலடிக்கு தயாரான இஸ்ரேல்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலில் நேற்று நள்ளிரவில் இருந்து தொடர்ந்து தாக்குதலானது நடத்தப்பட்டு வருகின்றது. எனவே அதற்காக ராக்கெட் மற்றும் பீரங்கி, நவீன இயந்திரங்களுடன் தாக்குதலானது காஸா நகரின் நான்கு புறங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் - பென் ஜமின் நெதன்யாகு

இத்தாக்குதலின் போது நிறைய சேதங்கள் ஏற்படும் என்பதால் இஸ்ரேல் பிரதமர் - பென் ஜமின் நெதன்யாகு ஒரு அறிவிப்பினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன் படி, “ஹமாஸ் படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதால் காஸாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும். தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவ படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.