நெதன்யாகு ட்விட்டர்
உலகம்

’ஹமாஸை நசுக்க வேண்டும்; வெற்றியடைய சிறிது காலம் ஆகும்’ - இஸ்ரேல் பிரதமர்

Prakash J

ஹமாஸ் போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "எங்கள் இலக்கு வெற்றி மற்றும் ஹமாஸ் ஒழிப்பு. நமக்கு உறுதியும் பொறுமையும் தேவை. ஏனென்றால் வெற்றியடைய சிறிது காலம் ஆகும், அதுவரை கடினமான சூழல் நிலவும்.

நாம் ஹமாஸை நசுக்க வேண்டும். நான் ஈரானையும் ஹிஸ்புல்லாவையும் எச்சரிக்க விரும்புகிறேன். நாங்கள் மக்களிடம் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறோம், நமது வீரர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். நாங்கள் மக்களுக்கு வாக்கு கொடுக்கிறோம், கடத்தப்பட்ட அனைவரையும் மீட்கும்வரை ஓயமாட்டோம். அவர்களது தாக்குதல் தொடரும்பட்சத்தில் தக்க பதிலடி இருக்கும்.

நம்மிடம் வலிமையான அரசு, வலிமையான ராணுவம் மற்றும் வலிமையான மக்கள் உள்ளனர், போரில் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 10வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட பதிரானா; மீண்டு எழுவாரா? தோனியால் பட்டை தீட்டப்பட்டவர் சொதப்பியது எங்கே?