ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் pt web
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்... இஸ்ரேலுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இஸ்ரேலில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

PT WEB

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இஸ்ரேலில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஹமாஸ் அமைப்பினருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பிணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்

மேலும், ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த இப்பேரணியின்போது, அந்நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடி, ஆயிரக்கணக்கான மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்று வரும் போரில், பாலஸ்தீனர்கள் 41,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.