இஸ்ரேல்  file image
உலகம்

காஸாவை கட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல்? ஹமாஸுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி?

PT WEB

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. காஸா பகுதியில் இன்னும் குண்டுகளின் சத்தங்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இஸ்ரேல் ராணுவத்தினரின் இடைவிடாத தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. மரண ஓலங்களும், குழந்தைகளின் அழுகுரல்களும் கேட்டுக்கொண்டே இருப்பது மனதை உறைய வைத்துள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

காஸா

இந்த சூழலில் காஸாவின் முனை பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் ராணுவ மையத்தை இஸ்ரேலிய ராணுவத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேலிய ராணுவ படைகள் காஸா நகரில் உள்ள ஹமாஸின் ராணுவ மையம் மீது தாக்குதல் நடத்தித் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த டாங்கி மற்றும் ஏவுகணைகள் ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றுள்ளார்.

மேலும் ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டோம் எனச் சபதம் எடுத்துக் கொண்டு தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்றனர். காஸா நகரின் ஷெஜாயா பகுதியில் உள்ள அல்-குத்தூஸ் மருத்துவமனைக்கு அருகே ஹமாஸ் அமைப்பினர் பதுக்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாம். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தரைப்படை ராணுவத்தை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் இஸ்ரேல் வீரர்கள் கவனமாக முன்னேறி செல்கின்றனர் எனவும், இந்த போரை ஹமாஸ் அமைப்பினர்தான் தொடங்கி வைத்துள்ளனர் போரில் வெல்வதே எங்களுடைய இலக்கு எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்தி உடனடியாக அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.