ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார் முகநூல்
உலகம்

ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்... போர் முடிவுக்கு வருமா?

ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

PT WEB

ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் ஒரு கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. சுயயேச்சையாக நடந்த இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான சின்வார் உயிரிழந்ததை நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார். சில வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சின்வார் கவனித்து வந்தார். தற்போது இவரது கொலை காசாவில் பற்றியெரியும் போரை மேலும் தீவிரமாக்கும் என அஞ்சப்படுகிறது.

ஹமாஸின் பிடியில் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டவரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. பணயக் கைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் நெதன்யாகு அரசை வலியுறுத்தி உள்ளனர்.

ஹமாஸ் தலைவர் சின்வாரின் மரணம், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட வழிவகுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஹமாஸின் பிடியில் உள்ள பணயக் கைதிகள் அனைவரும் மீட்கப்படும் வரை காசாவில் போர் முடிவுக்கு வராது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,

“சின்வார் கொல்லப்பட்டது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில், சாத்தானுக்கு பெரிய அடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது. எங்களது இலக்கு இன்னும் முழுமையடையவில்லை. பணயக் கைதிகளை மீட்கும் வரை ஓய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இதனிடையே, சின்வார் கொல்லப்பட்டதன் மூலம், போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.