உலகம்

கசப்பை மறக்க சிரிய அகதிகளுக்கு உதவும் இஸ்ரேல்

கசப்பை மறக்க சிரிய அகதிகளுக்கு உதவும் இஸ்ரேல்

webteam

சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு பல்வேறு நாடுகள் அடைக்கலம் அளித்து வந்தாலும், பகை நாடான இஸ்ரேலின் பணி உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. 

வெறும் மனித நேய உதவியாக இல்லாமல், புரையோடிப் போயிருக்கும் பகைமையை ஆற்றுவதற்கான வாய்ப்பாகவும் இதை இஸ்ரேல் பார்க்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, எரிபொருள், ஆடைகள் போன்றவற்றை வழங்குவதுடன், மருத்துவச் சிகிச்சையையும் இஸ்ரேல் அளித்து வருகிறது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதலே, இரு நாடுகளுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. 1967-ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போரின்போது, சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. எனினும் தற்போது நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இஸ்ரேல் நேரடியாகப் பங்கேற்கவில்லை.