இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டத்தை தொடர்ந்து நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டுயிருந்தார்.
இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் என்பதால் அதிக கவனத்தை பெற்று வந்தது. தேசிய ஒற்றுமை கூட்டணியிலிருந்து ஒரு பெண் எம்.பி தனது பதவியை விட்டு ராஜினமா செய்த நிலையில், ஆட்சி கவிழ்ந்து உடனடியாக மீண்டும் ஒரு பொது தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 120 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் மற்றும் யையார் லபிட்டுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுவரை 86% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 120 இடங்களில் 65 இடங்களில் வெற்றி வாய்ப்பை பெஞ்சமின் நெதன்யாகு தன் வசம் வைத்திள்ளார்.