உலகம்

மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனியர்களின் கிராமத்தை மீண்டும் இடித்த இஸ்ரேல்

மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனியர்களின் கிராமத்தை மீண்டும் இடித்த இஸ்ரேல்

Veeramani

இஸ்ரேலின் மேற்கு பகுதியான வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்க இஸ்ரேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக 35 குழந்தைகள் உட்பட  65க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் அதிகாரிகள் புதன்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கிர்பெட் ஹம்சுவின் பெடோயின் அமைந்திருக்கும் வீடுகளை எந்த எச்சரிக்கையும் இன்றி இடித்தனர்.

இந்த கிராமம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறிய இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி, அரசாங்கம் அவ்விடத்தில் வசிக்கும் மக்களுடன் பல மாதங்களாக பேசியதாகவும், அவர்களுக்கு மாற்று இடத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

1967 இல் மிடாஸ்ட் போரில் இஸ்ரேல் மேற்குக் கரையை கைப்பற்றியது. இப்பகுதி 1990 களில் இருந்து இடைக்கால சமாதான ஒப்பந்தங்களின் அடிப்படையில் முழு இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் இருந்து கட்டட அனுமதி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறுகிறார்கள்.