உலகம்

மியான்மரில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இஸ்லாமியர்

webteam

மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பி வங்கதேசத்துக்குள் செல்லும் ரோஹிங்யா ‌இஸ்லாமியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிறந்து ஓரிரு நாள்களே ஆன குழந்தைக‌ள், ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் உள்ளிட்டோரும் அகதிகளாகச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கை கால்களை இழந்தவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எனப் பலவகைப்பட்டோரும் இடம்பெயர்ந்து வருகிறார்கள். தங்களை மியான்மர் ராணுவம் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களைப் போல சுமார் ஒன்றரை லட்சம்பேர் கடந்த இரு வாரங்களில் வங்கதேசத்துக்குள் நுழைந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அண்மையில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்றை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சிலர் தாக்கியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக மியான்மர் ராணுவம் தெரிவிக்கிறது.