ind vs pak captains ட்விட்டர்
உலகம்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ISIS ஆதரவு அமைப்பு அச்சுறுத்தல் - பாதுகாப்பு அதிகரிப்பு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

webteam

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும், ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பை வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறவுள்ளது. முதல்முறையாக இந்த உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி உள்ள 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

அதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டி வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஐஎஸ் ஆதரவு அமைப்பு, மைதானத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

Ind vs Pak

மைதானத்துக்குள் நுழைந்து ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிரட்டல்களை கவனத்தில் கொண்டு மைதானத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.