உலகம்

‌குர்திஸ்தானின் கிர்குக் நகரை கைப்பற்றியது ஈராக் ராணுவம்

‌குர்திஸ்தானின் கிர்குக் நகரை கைப்பற்றியது ஈராக் ராணுவம்

webteam

குர்திஸ்தானின் கிர்குக் நகரில், குர்து வீரர்களின் கட்டுப்‌பாட்டில் இருந்த முக்கிய நிலைகளை ஈராக்கிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

ஈராக்கில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கா‌க குர்திஸ்தான் பகுதியில் 3 வாரங்களுக்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டி அடிப்பதற்காக, குர்திஸ்தான் பகுதிக்கு வழங்க‌ப்பட்ட கிர்குக் நகரை திரும்பப் பெற ஈராக் அரசு முடிவு செய்து, படைகளை அனுப்பி வைத்தது. இதன் காரணமாக அந்நகரில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தங்களை தடுத்த ‌குர்து வீரர்‌களுடன் சண்டையிட்டு, முக்கிய ராணுவத் தளம், விமான நிலையம், எ‌ண்ணெய் வயல் உள்ளிட்ட முக்கிய‌ நிலைகளை ஈராக்கிய படைக‌ள் கைப்பற்றியுள்ளன. ‌மேலும் அங்கிருந்த குர்து தேசிய கொடியும் இறக்கப்பட்டு, ஈராக்கிய கொடி பறக்கவிடப்பட்டது.