மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பாக்தாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ், “காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் யுத்தத்தை நிறுத்த வேண்டும். நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அதனை விரும்பவில்லை.
அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் நடக்கக் கூடாது. ஈரானுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் எரிசக்தி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.