சர்வதேச மகளிர் தினம் முகநூல்
உலகம்

”ஒவ்வொரு நாளும் உங்கள் சாதனைகளைக் கொண்டாடுவோம்”- சர்வதேச மகளிர் தினம் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினமானது உழைக்கும் பெண்களுக்காகவும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்களின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சர்வதேச மகளிர் தினமான இன்று!

அடுப்பங்கறை காற்றை சுவாசிக்க தொடங்கிய பெண்கள்மீது இன்று தென்றல் காற்று பரவ ஆரம்பித்துள்ளது. 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பதிக்க துவங்கினர். அன்று தொடங்கிய நிலைதான் இன்று திரைத்துறை,விண்வெளி துறை, மருத்துவம், போக்குவரத்து என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று..

சர்வதேச மகளிர் தினமானது உழைக்கும் பெண்களுக்காகவும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்களின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் மற்றும் திரையுலகினர் மகளிர் தினவாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

”இதுதான் என் மகளிர் தின பரிசு” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நேற்று உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை சமையல் எரிவாய்வுக்கு கூடுதல் மானியம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் தினமான இன்று சமையல் எரிவாயு உருளை விலை நூறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

”சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும்..” - மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துக்கள்

”நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம். சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

”சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள், மகளிருக்கான மரியாதையையும், அங்கீகாரத்தையும் முன்வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளன என்பதும், பெண்களுக்கான சமத்துவமும், சம உரிமையும் ஒவ்வொரு துறையிலும் உறுதி செய்யப்படுவதன் முதல்படியாக, மக்கள் பிரதிநிதித்துவத்தில் 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் நமது பிரதமர் அவர்கள்தான் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.”

வானதி சீனிவாசன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்

”அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் தைரியம், வலிமை மற்றும் கருணை எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். ஒவ்வொரு நாளும், உங்கள் சாதனைகளைக் கொண்டாடுவோம், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுவோம்.”

சர்வதேச மகளிர் தினமான இன்று கோலாகமால ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும் மற்றொரு புறம் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 வயது சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்று வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பெண் சுதந்திரம் ,முன்னேற்றம், அங்கீகாரம்,பாதுகாப்பு போன்றவையெல்லாம் வாய் வார்த்தையில் கூறப்பட்டாலும் அது நடைமுறையில் இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி குறிதான்.

திமுக எம்பி கனிமொழி

அனைத்து தரப்பு பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்