ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா, நச்சுப் புகையில் சிக்கி மூச்சுத் திணறியே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தில் கடந்த 27-ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில், அங்கிருந்த பாதுகாப்பு அமைப்பான ரகசிய பதுங்கு குழிகள் சேதமடைந்தன. இதனால், பதுங்குக் குழிகளை நச்சுப் புகை சூழ்ந்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நஸரல்லா உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நஸரல்லாவின் உடலில் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை என்பதும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.