உலகம்

மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு - பயணிகளின் நிலை என்ன?

webteam

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது. மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ள நிலையில், இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:

இது குறித்து அங்குள்ள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும் போது, “ ஜகார்த்தா வடக்குப் பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமான பாகங்கள் இருக்கிறது என மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று இந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது” என்றார். 

பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ், இரும்பு பாகங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்ததாகத் தெரிவித்தார். அந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/_vRBPrUgkxc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>