video image x page
உலகம்

அமெரிக்கா|இந்தியரின் நகைக்கடையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..20 பேர் முகமூடியுடன் நுழைந்து கைவரிசை!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி ஒருவரின் நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்திய வம்சாவளி ஒருவரின் நகைக்கடையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் பட்டப்பகலிலேயே கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்னிவேலில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட பி.என்.ஜி. என்ற நகைக்கடை நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நகைக்கடையில், முகமூடி அணிந்துவந்த 20 பேர் கொண்ட கும்பல் நகைக்கடையில் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இதையும் படிக்க: தொடரும் சம்பவங்கள்| உணவில் பிளேடு.. உறுதிசெய்து இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. நிராகரித்த பயணி!

கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், 20 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்து கடைக்குள் நுழைகின்றனர். உள்ளே நுழைந்ததும், நகைகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மேசைகளையும் உடைக்கின்றனர். நகைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மேசைக்கும் தலா ஒருவர் என கொள்ளையர்கள் அனைவரும் பிரித்துக்கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: “நீதி வேறு,நட்பு வேறு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கணும்”-தர்ஷன் வழக்கில் டாப் நடிகர் கருத்து