சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்றத்தன்மை, அந்த பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளி விவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.