உலகம்

‘எப்படியாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ - இந்திய மாணவர்கள் கோரிக்கை

‘எப்படியாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ - இந்திய மாணவர்கள் கோரிக்கை

Sinekadhara

"உக்ரைனின் சுமி பகுதியில் இந்திய மாணவர்கள் 600 பேர் சிக்கியுள்ளோம். எங்களை விரைந்து மீட்க வேண்டும்" என இந்திய மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை ’ஆபரேஷன் கங்கா’ என்ற ப்ளான் மூலம் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உக்ரைனின் எல்லைகளை அடைய படும் சிரமங்களை வீடியோக்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் இந்திய மாணவர்கள் 600 பேர் சிக்கியுள்ளோம். ஐரோப்பிய நாட்டின் எல்லையை அடைவதற்கு சுமார் 1,200 கி.மீ தூரம் செல்லவேண்டியுள்ளது. எங்களை விரைந்து மீட்க வேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவர்கள் தண்ணீர், மின்வசதியின்றி தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கார்கிவில் சிக்கியுள்ள மாணவர்கள் 5 பேருந்துகள் மூலம் மீட்கப்படுவதாகவும், இந்தியர்களை மீட்க 24 மணிநேரத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 16 விமானங்கள் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும், கார்கிவ் நகரில் 300 பேரும், சுமி பகுதியில் 700 இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.