அமெரிக்காவில் தான் படித்த கல்லூரியின் 50க்கும் மேற்பட்ட கணினிகளை செயலிழக்கச்செய்த இந்தியாவைச் சேர்ந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாத் அகுதோடா என்பவர் நியூயார்க் மாகாணத்திலுள்ள கல்லூரி ஒன்றில் படித்துவருகிறார். மாணவர் விசாவில் இவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் தான் படித்துவந்த கல்லூரியின் கணினிகளை வேண்டுமென்றே செயலிழக்கச் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். கணினியை செயலிழக்கச் செய்ய இவர் யுஎஸ்பி கில்லர் (USB Killer) ஐ பயன்படுத்தியுள்ளார்.
யுஎஸ்பி கில்லர் என்பது ஒரு யுஎஸ்பி மாதிரியான சாதனம் இதனை கணினியில் பொருத்தினால் அதனால் கணினியின் கெபாசிட்டருக்கு மின் வேகம் அதிகரிக்கப்பட்டு கணினியின் மின் அமைப்பே அழிக்கப்படும். இதன் மூலம் மானிட்டர், சிபியு அனைத்தும் செயலிழக்கும். இந்த முறை மூலமாவகே தான் கணினிகளை செயலிழக்கச்செய்ததாக விஸ்வநாத் அகுதோடா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கணினிகளை செயலிழக்கச்செய்யும் போது நான் இவனை கொள்ள போகிறேன் என்று சொல்லி தனது போனில் பதிவு செய்துகொண்டு 66 கணினிகளை செயலிழக்கச் செய்துள்ளார். விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட விஸ்வநாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் கணினியை ஏன் செயலிழக்கச்செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.