ஜான்வி கந்துல்லா  file image
உலகம்

"அவள் சாதாரண பெண்தான்”-இந்திய மாணவி மரணத்தில் கேலி பேசிய அமெரிக்க போலீஸ்! ஆடியோவில் பதிவான உரையாடல்

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் மிக அலட்சியமாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் மிக அலட்சியமாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது நிறைந்த இந்தியா வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விபத்து குறித்தும் ஜான்வி மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் பாடி கேமராவிலேயே பதிவாகி உள்ளது. ’இறந்த பெண் ஒரு சாதாரணமானவர்தான். பெரும் மதிப்பு மிக்கவர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது.

enquiry model image

மேலும் அதில், ‘மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஜான்வி மீது கெவின் டேவ் மோதினார். ஆனால், கெவின் வேகமாகச் சென்றதால் அவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.