குந்திப்பள்ளி சவுமியா ட்விட்டர்
உலகம்

அமெரிக்காவில் மற்றொரு சோகம்|மீண்டும் ஓர் இந்திய மாணவி கார் மோதி பலி! முடிவில்லாமல் தொடரும் மரணங்கள்!

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் கார் மோதி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோட்டேஸ்வர ராவ். இவர், முன்னாள் சி.ஆர்.பி.எப். படை வீரர் ஆவார். தற்போது சிறு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாலாமணி.

இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, புளோரிடாவிலுள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை படித்து வந்திருக்கிறார். படிப்பை முடித்ததும், வேலை தேடி வந்திருக்கிறார்.

இதையும் படிக்க: புதிய இலக்கு! Gpay, PhonePe-க்கு போட்டியாக அதானி குழுமத்தின் அடுத்த டார்கெட்!

இந்நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, இருப்பிடத்திற்குத் திரும்பும்போது, சாலையை கடந்த அவரின் மீது விரைவாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சவுமியாவின் உடலை தெலங்கானாவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி அவருடைய குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னதாக, கடந்த மே 11-ஆம் தேதி சவுமியா பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இதற்காக சவுமியாவின் தந்தை புது ஆடைகளை கொடுத்து அனுப்பி இருக்கிறார். தொடர்ந்து அவருடைய படிப்புக்காக செலவு செய்ய நிறைய போராட்டங்களை எதிர்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!