உலகம்

சென்னை-ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து - மோடி, புதின் திட்டம்

webteam

உற்சாக வரவேற்புடன் ரஷ்யாவில் கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்குச் சென்ற அவர், அதிபர் விளாதிமின் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னைக்கும் ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை தொடங்குவது குறித்து இருவரும் விவாதித்தனர். இதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதன்பின் அதிபர் புதினுடன் இணைந்து கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். கப்பல் கட்டும் தளத்தின் நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது குறித்து புதினுடன் பிரதமர் ஆலோசித்தார். இன்று மாலை நடைபெறும் இந்தியா, ரஷ்யா ஆண்டுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.