உலகம்

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய பாதிரியாருக்கு 6 வருட சிறை!

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய பாதிரியாருக்கு 6 வருட சிறை!

webteam

அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பாதிரியாருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தெற்கு டகோடா மாகாணத்தில் ராபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றி வந்தவர், ஜான் பிரவீன் (38). இந்தியரான இவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த வருடன் பிப்ரவரி மாதம் தேவாலயத்துக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஜான் பிரவீன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில், பாதிரியார் மீதான வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியார், கண்ணீர் விட்டு அழுதார். பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், அவளது குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில், அதிகபட்சமாக, ஓராண்டு சிறை தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என, பாதிரியார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, பாதிரியார் ஜான் பிரவீனுக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த 178 நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும். அவர் 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பரோலில் விடுதலை செய்யப் படலாம்.