உலகம்

நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

webteam

நடுவானில் விமானப் பெண்ணிடம் போன் நம்பர் கேட்டு டார்ச்சர் செய்த ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த விமானம் வழக்கம் போல இயக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவில் கம்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பரஞ்சாபே நிரஞ்சன் ஜெயந்த் (34) என்பவர் பயணம் செய்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்துக்கு பயண நேரம் 8 மணி நேரம். 

பிசினஸ் கிளாஸில் பயணம் செய்த ஜெயந்த் அதிகமாக மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அவரின் அருகில் வந்து உதவி செய்து கொண்டி ருந்த 25 வயது விமானப் பணிப்பெண்ணிடம், ‘நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று கூறியிருக்கிறார். நன்றி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் விமானப் பணிப்பெண். பின் இதே போன்று அடிக்கடி கூறியுள்ளார். 

இதனால் அவர் அருகில் வருவதைத் தவிர்த்தார் அந்த பணிப்பெண். பின்னர் எழுந்து அவர் அருகில் சென்ற ஜெயந்த், இடுப்பைப் பிடித்து தடவியு ள்ளார். இதற்கு மேல் பொறுக்க முடியாத அந்த பணிப்பெண், தனது சூப்பர்வைசரிடம் புகார் தெரிவித்தார். விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் இருக்கும் போது, அவரிடம் சென்று போன் நம்பரை கேட்டுள்ளார் ஜெயந்த். அவர் புன்னகைத்துக் கொண்டே போய்விட்டார். பிறகு அடிக் கடி சென்று போன் நம்பர் கேட்டு டாச்சர் செய்துள்ளார்.

இதையடுத்து சாங்கி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும் விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்ய ப்பட்ட ஜெயந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ’போதையில் தவறு செய்துவிட்டேன். இதற்காக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட் டேன்’ என்று அங்கு தெரிவித்தார் ஜெயந்த். இதையடுத்து அவருக்கு மூன்று வாரம் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.