அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்.
3 நாள் பயணத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை பாம்பியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள், பாதுகாப்பு, எச் 1 பி விவகாரம் உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிகிறது.
வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டத்திற்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சவுதி அரேபிய மன்னருடன் பாம்பியோ பேசினார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது