வெளிநாட்டில் தப்பியோடி டோமினிகா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் மெஹூல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான ஆவணங்களை விமானத்தில் அனுப்பப்பட்டிருப்பதாக ஆண்டிகுவா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தப்பிய மெஹூல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெஹூல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
இந்நிலைில் கடந்த சில நாள்களாக மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப ஆண்டிகுவா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவுக்கு திரும்ப எதிர்ப்பு தெரிவித்து மெஹூல் சோக்சி சார்பில் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஹூல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதற்கு விமானங்கள் மூலம் ஆவணங்களை அனுப்பப்பட்டுள்ளது.