உலகம்

ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க இந்தியா தயார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க இந்தியா தயார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Veeramani

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானியர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததுபோல் தற்போதும் உறுதுணையாக இருக்க இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

உதவி வழங்க முன்வருவோரை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்றும், சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள நெருக்கடி நிலை பற்றி ஐ.நா நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய விரும்புவோருக்கு ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதும், பாதுகாப்பும் தடையாக உருவாகக்கூடும் என குறிப்பிட்ட அவர், இந்த பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படவேண்டும் என வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக இந்தியா 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டு இருப்பதாகவும் அமைசச்சர் ஜெய்சங்கர் கூறினார்.