ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளது.
ஐ.நாவின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் என்ற அமைப்பானது, ஜிடிபி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான வாழ்க்கை, சமூக சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் இல்லாத நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு 156 நாடுகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் கூட இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான், நேபாளம், சீனா, இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் 118, 2017 இல் 122 வது இடத்தில் இருந்த இந்தியா மேலும் 11 இடங்கள் பின் தங்கியுள்ளது. பாகிஸ்தான் (75), பூடான் (97), நேபாளம் (101), இலங்கை (116) ஆகிய இடங்களில் உள்ளன. முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள மியான்மர்(130) நாடு இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.
நார்வே நாட்டை பின்னுக்கு தள்ளு பின்லாந்து இந்தாண்டு மகிழ்ச்சிமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பின்லாந்து 5வது இடத்தில் இருந்தது. நார்வே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 18வது இடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தன்ஷானியா(153), தெற்கு சூடான்(154), மத்திய ஆப்பிரிக்க குடியரசு(155), புருண்டி(156) ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் பின் தங்கிய நிலையில் உள்ளன.