பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் மற்றும் அபிஜித் பான்ர்ஜி ஆகிய மூன்று பேருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உலக வறுமையை போக்குவது தொடர்பான ஆய்வை நடத்தியதற்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்தவர். இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறு அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பரிசுப் பெற்ற எஸ்தர் டஃப்லோ(46) மிகவும் குறைந்த வயதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு கென்னத்.ஜெ.ஆரோ தனது 51ஆவது வயதில் 1972ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருந்தார். அபிஜித் பானர்ஜி-எஸ்தர் டஃப்லோ ஆகிய இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடதக்கது.