அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அருண்ஜெட்லி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பேசினார். அப்போது, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார்.
அரசு செய்து வரும் அடிப்படை பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் உலக பொருளாதார போக்கின் காரணமாகவும் இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் உள்கட்டமைப்புகளில் அதிகமான முதலீடுகள் வர வாய்ப்புள்ளதாக அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார்.