உலகம்

“எந்த நாடும் இந்தியா போல வளர்ச்சி அடையவில்லை” - பிரதமர் மோடி

“எந்த நாடும் இந்தியா போல வளர்ச்சி அடையவில்லை” - பிரதமர் மோடி

webteam

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விடுத்த அழைப்பின் பேரில், பிரதமர் மோடி தென்கொரிய பயணத்தை தொடர்ந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்கு சென்று மூன் ஜே இன் ஐ சந்திப்பது, இது இரண்டாவது முறையாகும். பிரதமரின் இந்தச் சுற்றுப்பயணம் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்தப் பயணத்தின்போது, வர்த்தக உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையை மோடி நடத்துகிறார். மேலும் அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். தெ‌ன் கொரிய அரசின் அமைதி விருதையும் அவர் பெற்றுக்கொள்வுள்ளார். இதற்கிடையே தலைநகர் சியோலில் உள்ள லோட்டே ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பின்னர் சியோலில் நடைபெற்ற இந்திய - கொரிய தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் மோடி பேசினார். உலகில் வேறு எந்த நாடும் இந்தியாவை போன்ற வேகமான வளர்ச்சி பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலிமை மிக்கதாக இருப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 25 ஆயிரம் கோடி டாலர் அன்னிய முதலீட்டை இந்தியா ஈ‌ர்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.