உலகம்

அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்

அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்

webteam

அமெரிக்காவிடமிருந்து ஷேல் எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலக நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையிலிருந்து இந்திய, சீனா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளுக்கு 6 மாதங்கள் விலக்கு அளித்தது. தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்தவந்த விலக்கு காலம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்திய ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது. 

இந்நிலையில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யும் ஷேல் எண்ணெய் அளவை குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர், “ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் மாற்றும் ஏற்படவுள்ளது. அதன்படி அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ஷேல் எண்ணெய் அளவு குறைக்கப்படவுள்ளது. 

ஏனென்றால் இந்தியாவில் ஷேல் எண்ணெயை சுத்திகரிப்பதற்கு மிகவும் குறைந்த எண்ணெய் ஆலைகளே உள்ளன. அத்துடன் ஷேல் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு அதிக செலவாகும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பைவிட ஷேல் எண்ணெய் சுத்திகரிப்புக்கு அதிக செலவாகும். 

ஏற்கெனவே ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 10% குறையும். இதற்கு மாற்று வழியாக இருக்கும் முறை ஷேல் எண்ணெய்யாக இருந்தால் அது இந்தியாவின் இறக்குமதி செலவை கூட்டும். இது இந்தியாவின் வர்த்தகத்திற்கு ஏற்றது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.