உலகம்

உலக அளவில் மனஅழுத்தம், கோபம், கவலை அதிகரிப்பு.! காரணமாக அமைந்த கொரோனா கால அச்சம்!

உலக அளவில் மனஅழுத்தம், கோபம், கவலை அதிகரிப்பு.! காரணமாக அமைந்த கொரோனா கால அச்சம்!

webteam

உலக அளவில் மனஅழுத்தம், கவலை, கோபம் ஆகியவை தற்போது உச்சத்தில் இருப்பதாக ஐநா ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் கொரோனா கால அச்சம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா-வின் மனிதவள மேம்பாடுக்கான விரிவான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் மக்களிடம் மனஅழுத்தம், கோபம், கவலை ஆகியவை அதிகரித்து வந்திருப்பதாகவும், அது தற்போது உச்ச அளவில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாடுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுகாதாரத்திற்கான தொகையில் 2 சதவிகிதத்திற்கு குறைவாகவே மனநல சிகிச்சைக்கு ஒதுக்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிச்சயமற்ற நிலை, சமத்துவம் இன்மை, பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றால் நம்பிக்கையிழப்பு அதிகரித்து மனஅழுத்த பிரச்னைகளை சந்திப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கொரோனா காலத்தில் நிலவிய பொதுமுடக்கம், வேலையிழப்பு, உடல்நலக் குறைவு அச்சம் ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.