உலகம்

ஹிஸ்புல் தலைவர் பேட்டி: இந்தியா வருத்தம்

ஹிஸ்புல் தலைவர் பேட்டி: இந்தியா வருத்தம்

webteam

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை காட்டுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சலாவுதின் அளித்துள்ள பேட்டி பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதை நிருபித்திருப்பதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதுபோன்ற பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை பாகிஸ்தானின் மூத்த நிர்வாகிகள் நியாயப்படுத்தி பேசிவருவது வருத்தமளிப்பதாகவும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள சையது சலாவூதீன் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்தியதாகவும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகவும் கூறியிருந்தார்.